பொது மக்களின் ஜனநாயக உரிமைகளைக் காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற்கடிப்பதற்கு தயாராக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டப்பட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பலவித குறுகிய நோக்கங்களுக்காக சிலர் பொதுமக்களின் ஜனநாயக உரிமையை பறிக்க முயற்சிக்கிறார்கள். அவ்வாறான செய்யப்பாடுகளை முறியடிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி பின்வாங்காது முனைப்புடன் செய்யப்படும்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலை பொது மக்களிடம் பெற்றுக்கொடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியை தோற்கடிக்கும் நோக்கில் குறுகிய அரசியல் நோக்கில் செயற்படும் எந்தவொரு தீயசக்தியையும் தோற்கடிக்க ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருக்கின்றது.” என்றுள்ளது.
Thursday, November 23, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment