“நாட்டை சீரழிக்கும் மைத்திரி- ரணில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கு மக்கள் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“மைத்திரி- ரணில் அரசாங்கம் நாட்டை பெரும் கடன் சுமைக்குள் கொண்டு செல்கின்றது. நாட்டு மக்கள் மீது கடும் வரிச்சுமையைச் சுமத்தி வருகின்றது. 2014ஆம் ஆண்டு எமது ஆட்சிக் காலத்தில் மக்கள் செலுத்திய வரியைக் காட்டிலும், 2018ஆம் ஆண்டு மக்கள் இரண்டு மடங்கு வரியைச் செலுத்த வேண்டி ஏற்படும். இந்த அரசாங்கம் நாட்டுக்காக இல்லாமல், அமெரிக்காவில் உள்ளவர்களுக்கான செயலாற்றுகின்றது.” என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
Home
»
Sri Lanka
»
மைத்திரி - ரணில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: மஹிந்த
Friday, November 17, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment