Thursday, November 9, 2017

பல ஆண்டுகளாக மக்களுக்கு பொழுதுபோக்காக இருந்துவரும் சினிமாவிற்கும், தணிக்கைக்கும் தொன்றுதொட்டு ஏதாவது ஒரு வகையில் பிரச்சனைகள் இருந்துகொண்டு தான் வருகிறது. இயக்குனர்களுக்கு படம் எடுப்பதில் முழு சுதந்திரம் இல்லாமை,மிருகங்கள் பயன்படுத்துவதில் சிக்கல்,புகை பிடிக்கும் மற்றும் தண்ணி அடிக்கும் காட்சிகள், கவர்ச்சியான காட்சிகள் நீக்குவதில் இருந்து அனைத்திலும் தணிக்கையின் பங்கு அதிகம். இந்நிலையில் Central Board of Film Certification (CBFC) சார்பாக புதிய சட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி இனிமேல் எந்த ஒரு படமும் தணிக்கையாகி வர 68 நாட்கள் பிடிக்கும். மேலும் இந்த 68 நாட்கள் இடைவெளியில் படத்தை சீக்கிரம் தணிக்கை செய்ய எந்த ஒரு அதிகாரியையும் தொடர்பு கொள்ள கூடாது.

நடுவில் ப்ரோக்கர்களை வைத்தும் அணுகக்கூடாது. படத்தை பற்றின அப்டேட்டுகளை தெரிந்து கொள்ள  CBFC இணையதளத்தில் தான் பார்க்கவேண்டும். இந்த புதிய சட்டம் தொடர்பாக எந்த ஒரு CBFC அதிகாரியையும் போனில் தொடர்பு கொள்ளகூடாது. அப்படி யாரவது சட்டவிரோதமாக வேகமான தணிக்கைக்கு அதிகாரிகளை உட்படுத்தினால் அதை பற்றி CBFC மேலிடத்தில் புகார் அளிக்கலாம்.

இதனால் தயாரிப்பாளர்கள் இடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. பொதுவாக ஒரு படத்தை தணிக்கை செய்ய அதிகபட்சம் ஒரு வாரம் வரை பிடிக்கும் அது தயாரிப்பாளர்களுக்கு ஏதுவாக இருந்தது. இப்போது இந்த புதிய சட்டத்தினால் கடன் வாங்கி படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு 68 நாட்கள் இடைவெளியில் மட்டும் பல லட்ச ருபாய் முதல் சில கோடி ரூபாய் வரை வட்டி கட்டவேண்டியது வரும். மேலும் திருட்டு விசிடி மற்றும் தமிழ் ராக்கர்ஸ் பிரச்சனைகளும் தலை தூக்கும்.ஒரு பெரிய பட்ஜெட்டில் இரு மொழிகளில் ஒரு படம் தயாரானால் இருவேறு மொழிகளுக்கேற்ப தணிக்கையின் காத்திருப்பு  நேரமும் வேறுபடும். இதன் மூலம் வட்டிகளும், வரிகளும் அதிகரித்து பல கோடிகள் நஷ்டமாகும்.

இதனால் தயரிப்பாளர்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை ஏற்கனவே இரண்டு மாதங்களாக ரிலீசான ஸ்பைடர்,ஹரஹர மஹா தேவகி, மெர்சல் போன்ற படங்களுக்கு ஏற்பட்டது. இதை பற்றி CBFC பிராந்திய அதிகாரியிடம் புகாரும் அளிக்க பட்டுள்ளது. மேலும் தயாரிப்பாளர் சங்க துணை தலைவர், நடிகர் பிரகாஷ் ராஜ் தயரிப்பாளர் சங்கம் சார்பாக CBFC உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையம் நடத்தியுள்ளார். எனவே தணிக்கை துறை கூடிய விரைவில் இந்த இக்கட்டான சூழ்நிலையை புரிந்து கொண்டு இந்த புதிய சட்டத்தை திருத்தி சினிமாவிற்கு சாதகமான சூழலை உருவாக்கி தணிக்கை பிரச்சனைகளில் இருந்து நிரந்தர தீர்வை உண்டாக்கும் என்று நம்பிக்கையோடு காத்து கிடக்கிறது சினிமா தரப்பு.

0 comments :

Post a Comment

 
Toggle Footer