உலகக் கத்தோலிக்கர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ் 3 நாள் சுற்றுப் பயணமாக இன்று திங்கட்கிழமை மியான்மார் வந்தடைந்துள்ளார். அங்கு அவர் றோஹிங்கியா மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் மியான்மார் அரச தலைவர் ஆங் சான் சூ க்யி உடனும் இராணுவத் தளபதி மின் ஆங் உடனும் பேச்சுவார்த்தை நடாத்துவார் எனத் தெரிய வருகின்றது. இந்த சுற்றுப் பயணம் முடிந்ததும் போப் பிரான்சிஸ் வங்கதேசம் செல்லவுள்ளார்.
முன்னதாக மனிலாவில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெர்ரெஸ் உம் மியான்மாரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது அமெரிக்க வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்சனும் வங்கதேசத்தில் இருந்து றோஹிங்கியா அகதிகளை மீளப்பெற்று மியான்மாரில் குடியமர்த்த வேண்டுமென அந்நாட்டு அரசுக்கு வலியுறுத்தியிருந்தனர்.
இதையடுத்து றோஹிங்கியா அகதிகளை வங்க தேசத்தில் இருந்து மீளப் பெறுவது தொடர்பில் அந்நாட்டு அரசுடன் ஒப்பந்தம் கைச்சாத்தாகி உள்ளதாக மியான்மார் அரசு தெரிவித்தது. மேலும் இந்நடவடிக்கை 2 மாதங்களில் நிறைவேற்றப் படும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் தான் பாப்பரசர் பிரான்சிஸ் மியான்மாருக்கு சுற்றுப் பயணம் மேற் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Home
»
World News
»
மியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோஹிங்கியா அகதிகள் தொடர்பில் கலந்தாலோசனை
Tuesday, November 28, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment