Friday, November 10, 2017

“கதகளி,இது நம்ம ஆளு” வெற்றிப் படங்களுக்குப் பிறகு இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தின் பூஜை அரங்கேறியது. நடிகர் சூர்யா வழங்கும் 2D எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் PRODUCTION NO: 5 என்று தற்சமயம் பெயர் சூட்டப்பட்டுள்ள,’ கார்த்தி’ நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமானது.

இப்படத்தின் படப்பிடிப்பை சூர்யா தாயார் லட்சுமி சிவகுமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து படப்பிடிப்பு ஐந்து தினங்கள் சென்னையில் நடைபெறும்.இதையடுத்து தென்காசியில் 40 நாட்கள் தொடர் படப்பிடிப்பு நடைபெறுகிறது. விழாவில் சிவகுமார், சூர்யா, கார்த்தி, சத்யராஜ், சாயிஷா சாய்கல், பொன்வண்ணன், சூரி, ஸ்ரீமன், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், டைரக்டர் மனோஜ்குமார், சுசீந்திரன், சுதா கங்கோரா,இசையமைப்பாளர் D.இமான்,2D இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன், தயாரிப்பாளர்கள் S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு, பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமண், சக்தி பிலிம்ஸ் சக்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer