Tuesday, November 21, 2017

ஆளுநர் நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் சாசன சட்டப்படி நடக்கறது என்றால், பெரும்பான்மையை இல்லாத எடப்பாடி பழனிசாமி அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க அழைப்பு விடுக்காதது ஏன் என்று மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு நடவடிக்கைகள் விதிகளை மீறியது என்று குற்றஞ்சாட்டினார்.

அரசியல் சாசனத்தை மதிப்பவராக இருந்தால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சட்டமன்றத்தை ஆளுநர் உடனடியாக கூட்டவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழ பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள சென்றபோது மாவட்ட ஆட்சியர், காவல் துறை ஆணையர் உள்ளிட்ட 12 துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இது ஆளுநர் அதிகாரத்தை மீறிய செயல் என்று சர்ச்சை எழுந்துள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer