Wednesday, November 1, 2017

இணக்கப்பட்ட வடக்கு- கிழக்கில், சமஷ்டி அடிப்படையில் அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சர்வதேசம் வழங்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காலத்தாமதத்தை ஏற்படுத்தாது விரைவாக தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும். இல்லாவிடின் மீண்டும் சர்வதேச நன்மதிப்பை இலங்கை இழக்க நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் இரண்டாவது நாளாக நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க காலத்தில் ஒரு அரசியல் தீர்வுகாணும் முயற்சியொன்று இடம்பெற்றது. இதன்போது ஒற்றையாட்சிக்குப் பதிலாக பிராந்தியங்களின் ஒன்றியம் என அத்தீர்வுத்திட்டத்தில் கூறப்பட்டது. தெளிவான அதிகாரப்பகிர்வு அவசியமென வலியுறுத்தப்பட்டிருந்ததுடன், வடக்கு- கிழக்கு இணைப்பின் போது முஸ்லிம்களும் ஒரு தனி அலகு வேண்டுமெனவும் பேசப்பட்டது. அந்தத் தீர்வுத் திட்டத்தை கொண்டுவந்திருந்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்கூட இன்று பதவிகளுக்காக இனவாதமாக பேசுகிறார்.

2015 ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட் மைத்திரிபால சிறிசேன, புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவது, நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்தல், வடக்கு- கிழக்கில் பொது மக்களிடம் இருந்து இராணுவத்தினர் கைப்பறிய நிலங்கள் கையளிக்கப்படும், தேசிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப்படும் எனக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில்தான் தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் பெரும் ஆதரவுக் கொடுத்தனர்.

2015ஆம் ஆண்டு முன்னர் எப்போதும் இல்லாதவாறு வரலாற்றில் எதிர் எதிர் திசையில் பயணித்திருந்த சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஆட்சி அதிகாரத்தை பங்கிட்டுக்கொண்டன. அதனாலேயே சர்வதேச நாடுகளும் ஆட்சிமாற்றத்துடன் பின்நிற்று செயற்பட்டன.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் இந்த நாட்டில் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேணடுமென வலியுறுத்தபட்டிருந்தது. அதனை இலங்கை உட்பட 47 நாடுகள் ஏற்றுக்கொண்டன. நல்லாட்சிக்கு சர்வதேச ஆதரவை இலங்கை மனதில் கொள்ள வேண்டும். ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய தீர்க்கமான பொறுப்பு அரசுக்கு உள்ளது. அதேபோல் கொடுத்த வாக்குறுதிகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும். ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்ற தவறினால் அல்லது தமிழர்களினதும் சர்வதேசத்தினதும் நம்பிக்கையை இழக்க வெண்டும்.

இடைக்கால அறிக்கை ஒரு முழுமையான அரசியலமைப்பு அல்ல. ஒரு அரசியல் திட்டத்தை நிறைவேற்ற பல கட்சிகளின் கருத்துளோடு கெண்டுவரப்பட்டுள்ள ஒரு அறிக்கையாகும். இதை வைத்துகொண்டுதான் நாடு பிளவுப்பட போகின்றது என மஹிந்த அணியினர் பிரசாரம் செய்கின்றனர்.

ராஜபக்ஷ தலைமையிலான எதிரணி ஊழல் மோசடிளையும் போர்க்குற்றங்களையுத் மூடிமறைக்கவே புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது. இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டுமென தவிக்கிறார்கள். போர்க்குற்றங்களில் இருந்த விடுபட வேண்டுமென தவிக்கிறார்கள். 70 வருடங்களால இனப்பிரச்சினை தீர்க்க தமிழர்களின் பேராதரவுடன் கொண்டுவரப்பட்டுள்ள ஆட்சிக்கு எதிர்ப்பை வெளியிட்டு அரசியலமைப்பு உருவாக்கும் பணியை தடுப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

1957 பண்டா - செல்வாவுக்கு இடையில் இனப்பிரச்சினை தீர்வுக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அது முழுமையானதாக இல்லாவிடும் வடக்கு, கிழக்குக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. கண்டிய தலைவர்களோடு சேர்ந்து பண்டாரநாயக்க சமஷ்டி அரசியலமைப்புதான் வேண்டும் கூறியிருந்ததன் அடிப்படையில் அந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.

ஆட்சிமாற்றத்தை தமிழர்கள் எதற்கு கொண்டுவந்தனர். ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்தவும், இராணுவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணவும், காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வுகாணவுமே ஆகும். இடைக்கால அறிக்கையில் இணக்கப்பாடு இல்லாவிடினும், இணக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் ஒரு சமஷ்டியுடன் அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும் என்பதுதான் தமிழர்களின் நிலைப்பாடு.

சந்திரிக்காவின் தீர்வுத்திட்டத்தின் போது தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு விடயத்தில் முஸ்லிம் மக்கள் எதிராக நிற்கமாட்டார்கள் என்று மறைந்த தலைவர் அஸ்ரப் கூறியிருந்தார். நாங்கள் இப்போதும் அவர்களுக்கு அழைப்பு விடுகின்றோம் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தில் எம்முடன் கைகோருங்கள்.

இடைக்கால அறிக்கை திருப்தி படுத்தாவிடினும் அதனை மேப்படுத்தி சமஷ்டி தன்மை வாய்ந்தாக அதிகாரங்கள் முழுமையான பகிரப்பட்டும் ஏற்பாடை செய்ய வேண்டும். இணைந்த வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கான தீர்வு திட்டத்திற்கே போராடி வருகின்றோம்.

2000ஆம் ஆண்டு பேசப்பட்ட தீர்வுத்திட்டம் கொண்டுவரப்பட்டிருந்தால தேசிய பிரச்சினைக்கு ஒரு சிறந்த அரசியல் தீர்வுத்திட்டத்தை நோக்கி சென்றிருக்க முடியும். பல தலைவர்களையும் இலட்சகணக்கான மக்களையும் இழந்திருக்க மாட்டோம். 2002ஆம் ஆண்டு புலிகளாக முன்வந்து போர் நிறுத்தத்தை அறிவித்திருந்த போது தமிழர்களின் சுயநிர்ணய உரிமை பற்றி ஒஸ்லோவில் பேசப்பட்டிருந்தது.

ராஜபக்ஷ காலத்திலும் நிபுணர்கள் குழுகள் நிறைவேற்றிய சில தீர்மானங்கள் முன்னேற்றகரமாக இருந்தன. ஆனால், நடைமுறைக்கு வரவில்லை. ஜனாதிபதி தற்போது மீண்டும் சர்வக்கட்சி மற்றும் சர்வ மத மாநாடுகளை கூட்டவுள்ளதாக கூறியுள்ளார். இறந்தகாலம் போன்று இதுவும் ஒரு இழுத்தடிப்புக்கான ஏற்பாடா என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது. இந்த நாட்டில் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு மாநாடுகள் கூறப்பட்டிருந்தன. ஆனால், அனைத்தும் தோல்வியிலேயே முடிந்திருந்தன.

நேற்றைய தினம் காணி அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்படாது என்று அமைச்சர் கிரியெல்ல கூறியிருந்தார். எங்களது கோரிக்கையானது, முழுமையான காணி அதிகாரங்கள் மாகாண அரசுக்கு வழங்கப்பட வேண்டும். மாகாண நிலங்களில் அபிவிருத்தியை நடைமுறைப்படுத்துவது மாகாணங்களாகத்தான் இருக்க வேண்டும். கொள்கை வகுப்பது மத்திய அரசுக்கு இருந்தாலும் மாகாணம்தான் தமது மாகாணத்தில் முன்னெடுக்க வேண்டியதை தீர்மானிக்க வேண்டும்.

2014ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டிருந்த ஒரு வழக்கு குறித்த தீர்பை அண்மையில் உச்ச நீதிமன்றம் வெளியிட்டிருந்தது. அதில் தமிழரசுக்கு கட்சியின் கோட்பாடுகள் எந்த வகையிலும் நாட்டை பிளவுக்கு ஈட்டுச் செல்லாது என சர்வதேச நாடுகளை உதாரணங்காட்டி அறிவித்திருந்தது. சமஷ்டி பிரிவினையாகிவிடும் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அறிவித்திருந்தது.

எனவே, சமஷ்டி என்ற வார்த்தையை அப்படியே பாவியுங்கள் என்று கூறவில்லை. சமஷ்டியின் அடிப்படையிலல் அதிகாங்கள் பகிரப்பட வேண்டும். பகிரப்பட அதிகாரங்கள் மீள பெற முடியாதவகையில் இருக்க வேண்டும்.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு சமஷ்டி தன்மையில் இணைந்த வடக்கு,கிழக்கில் அதிகாரத்தை பகிராவிட்டால் சர்வதேசம் வழங்கியுள்ள இந்தந் சந்தர்ப்பம் நழுவிப்போகும். சர்வதேசம் வழங்கியுள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஐ.நாவுக்கு கொடுத்த வாக்குறுதியின் தீர்மானத்தை நிறைவேற்றாவிட்டால இலங்கையின் நன்மதிப்பை இழக்க நேரிடும்.

ஒரு சிறந்த அரசியல் தீர்வுத்திட்டத்தை ஏற்படுத்த உறுதிப்பூண்டால் மாத்திரமே தமிழர்கள் அதனை ஏற்பதா இல்லையா என்று தீர்மானிக்க மூடியும். காலம் தாமதிக்காது தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer