‘நாச்சியார்’ பட டீசரில் வந்த ‘தே.....’ டயலாக் இப்படியொரு அதிர்வலையை ஏற்படுத்தும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லையாம் ‘மேற்படியார்’. கழுவி கழுவி ஊற்றிய ஊர் உலகத்தை மேலும் அதே போக்கிலேயே நீடிக்க விடுவது அவ்வளவு நல்லதாகவும் படவில்லை அவருக்கு. உடனே வேறொரு வீடியோவை அதே வேகத்தில் ரிலீஸ் செய்வதுதான் புத்திசாலித்தனம் என்று நினைக்க...
சுட சுட வந்தது படத்தின் ஹீரோ ஜி.வி.பிரகாஷும், பாடகி பிரியங்காவும் பாடிய ஒரு பாடல். ஆனால் கிராக்கி என்னவோ முதலில் வந்த வீடியோவுக்குதான். இந்த இதழ் கடைக்கு வருகிற நாளில் யு ட்யூப் சரித்திரத்தில் தொடர்ந்து ட்ரென்டிங்கில் இருக்கிற டீஸர் என்கிற பெயரை நாச்சியாரின் தே... டயலாக் டீஸர் பெற்றிருக்கும்.
ஒருபுறம் சமூகத்திற்காக சிந்திக்கிற அறம் பட இயக்குனர் கோபி நயினார். இன்னொரு புறம் சமூகமே நிந்திக்கிற மேற்படியார். ஹரே... பையா. இதுதான்யா தமிழ்சினிமா.
Tuesday, November 28, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment