Wednesday, November 15, 2017

தென்னாபிரிக்க ஒன்றியத்தில் உள்ள நாடான சிம்பாபேயில், இன்று அதிகாலை அன் நாட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. கடந்த 1980ம் ஆண்டு முதல் அன் நாட்டு ஜனாதிபதியாக இருக்கும் சர்வாதிகாரியான றொபேட் முகாபே பாதுகாப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர்  இருக்கும் அதிர்பர் மாளிகையை சுற்றிவளைத்த ராணுவம். உள்ளே செல்லவில்லை. மாறாக அவரை கைதியாக மாற்றியுள்ளது.

அத்தோடு தேசிய தொலைக்காட்சியையும் அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார்கள். முன்னதாக அதிபர் முகாபேக்கு ஆதரவான ராணுவத்தினர். அன் நாட்டு ராணுவத்தோடு மோதலில் ஈடுபட்டார்கள். இருப்பினும் அவர்கள் முகாபேயின் ஆதரவு பாதுகாப்பு ராணுவத்தினர். இவர்கள் எண்ணிக்கையில் சிறியவர்கள் என்பதனால் எதுவும் செய்ய முடியாது. துணை ஜனாதிபதியை திடீரென பதவி நீக்கம் செய்த முகாபே. தனது மனைவிகளில் ஒருவரான கிறேஸ் என்னும் பெண்ணை துணை ஜனாதிபதியாக நியமிக்க திட்டங்களை தீட்டினார்.

இன் நிலையில் தான் அன் நாட்டு ராணுவ தளபதி, ஆட்சியைக் கவிழ்த்து ராணுவ ஆட்சியை கொண்டுவந்துள்ளார் என்று சர்வதேச செய்திச் சேவையான BBC தெரிவித்துள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer