யாழ்ப்பாணத்திலுள்ள இராணுவ முகாம்களை யாழ். கோட்டைக்குள் கொண்டுவருவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “யாழ்ப்பாணத்தில் அரச மற்றும் தனியார் காணிகளிலுள்ள இராணுவ முகாம்களை மாற்றுவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்திற்கு பதில் கிடைத்ததும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
இராணுவ முகாம்களை யாழ். கோட்டைக்குள் கொண்டுவருமாறு வலியுறுத்தி வடக்கு ஆளுநர் ஜனாதிபதிக்கு கடிதம்!
Thursday, November 16, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment