இலங்கைக்குள் இடம்பெறும் ஆட்கடத்தல் மற்றும் எல்லைப் பாதுகாப்பு குறித்து புதிய சட்ட வரைவுக்கான பணி இடம்பெற்றுவருவதாக சட்டம் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயிற்சி செயலமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அங்கு சாகல ரத்நாயக்க தொடர்ந்து உரையாற்றுகையில், “இலங்கையில் புலம்பெயர் ஆட்கடத்தலை தடுப்பதற்கும், நாட்டின் எல்லை பாதுகாப்பிற்குமான புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். சிறப்பு நடைமுறையும் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக வலுவான சட்டங்கள் தேவைப்படுகிறது. இவ்வாறான வலுவான சட்டங்கள் இல்லாமல் போகும் பட்சத்தில், ஆட்கடத்தல் செயற்பாட்டைக் கட்டுப்படுத்துவது சிக்கலாக அமையும். எனவே, இதன் ஓர் அங்கமாக, ஆட்கடத்தல்காரர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கும் முகமாக, விரிவான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
அவுஸ்திரேலியாவின் மூலோபாய கொள்கை நிறுவனம் இலங்கையில் புலம்பெயர் ஆட்கடத்தலை தடுப்பதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மேற்கு, வடமேற்கு, தெற்கு கடற்கரைகளை இலக்காகக் கொண்டு ஆட்கடத்தல்கள் இடம்பெறுகின்றன. இவர்கள் மேற்கொள்ளும் ஊழல் செயற்பாடுகளும் அம்பலமாகி இருக்கின்றன. போலி கடவுச்சீட்டுக்களை தயாரிக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவற்றை தடுப்பதற்கான விரிவான வேலைத்திட்டம் அவசியம்.” என்றுள்ளார்.
Wednesday, November 15, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment