யாழ். மணல்காட்டு பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவரை பாலியல் வல்லுறவு செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு 15 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்பளித்துள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு ஜீலை மாதம் மணல்காட்டு பிரதேசத்தை சேர்ந்த 16 வயதினை விட குறைந்த பெண் பிள்ளையை கற்பழித்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் நான்கு பிள்ளைகளின் தந்தையான விக்டர் அருந்தவராஜா (47) என்பவர் எதிரியாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தார்.
யாழ்.மேல் நீதிமன்றில் இடம்பெற்ற குறித்த பாலியல் வல்லுறவு வழக்கில் அரச சட்டவாதியான நாகரட்ணம் நிஷாந், குறித்த எதிரிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அத்துடன் குறித்த நபர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறுமி கர்ப்;பமாகியதில் நான்கு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
எனவே ஒரு சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து அப் பெண்ணின் வாழ்க்கையை வீணடித்து கர்ப்பவாதியாக்கிய குறித்த எதிரிக்கு சட்டப் புத்தகத்தில் உள்ள அதியூட்ச தண்டனை வழங்க வேண்டும் என மன்றில் குறிப்பிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து குறித்த நபருக்கு 15 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனையும், 30 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் கட்டத்தவறின் 18 மாத கடூழிய சிறையும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 6 இலட்சம் ரூபா நஷ்ட ஈடும் கட்டத்தவறின் 18 மாத கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.
Tuesday, November 21, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment