Sunday, November 19, 2017

கட்சிக்கும் ஆட்சிக்கும் விசுவாசமாக இருந்ததால்தான் முதல்வர் பொறுப்புக்கு தான் வந்துள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஆளுநர் ஆய்வு செய்தார் என்று கூறுவதே தவறு. அரசு திட்டங்களை தெரிந்து கொள்ளவே ஆளுநர் அதிகாரிகளை சந்தித்தார்.

போயஸ் தோட்ட இல்லத்தில் நடைபெற்ற சோதனையால் மனம் வேதனை அடைந்துள்ளது. அதற்கு சசிகலா குடும்பமே காரணம்.

கட்சிக்கும் ஆட்சிக்கும் விசுவாசமாக இருந்ததால்தான் இந்த பொறுப்புக்கு நான் வந்துள்ளேன். ஒட்டுமொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவின்படி நான் முதல்வராக உள்ளேன்.

ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக தன்னைத்தானே டிடிவி தினகரன் அறிவித்துக்கொண்டார். சில பேர் செய்த தவறால், கட்சிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. வரி ஏய்ப்பவர்கள் மீது சோதனை நடத்துவது வழக்கம்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer