சவுதி அரேபியாவில் ஊழல் குற்றச்சாட்டுக்களில் கைதானவர்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்க அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் தமது சொத்துக்களை அரசுக்கு எழுதிக் கொடுத்தால் உடன் விடுதலை செய்யப் படுவார்கள் என நிபந்தனை விதிக்கப் பட்டுள்ளது.
சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் ஊழல் ஒழிப்புக் குழு அமைக்கப் பட்டு 2 வாரங்களில் இதுவரை அந்நாட்டு இளவரசர்கள், பணக்காரர்கள், அமைச்சர்கள் என 200 பேர் வரை கைது செய்யப் பட்டூள்ளனர். இதில் அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் அடங்குவதுடன் 3 அமைச்சர்கள் பதவியும் பறிக்கப் பட்டது. மேலும் சவுதியின் பெரும் பணக்காரர் அல் வலீத் பின் தலால் மீதும் குற்றம் சாட்டப் பட்டிருந்தது. இந்நிலையில் தான் இந்தக் குற்றவாளிகள் தமது 70% வீத சொத்துக்களை அரசுக்கு எழுதிக் கொடுத்தால் உடனே விடுவிக்கப் படுவார்கள் என சவுதி அரசு நிபந்தனை விதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சவுதியில் கடந்த காலத்தில் நிலவிய கருப்புப் பணம் மற்றும் ஊழல் போன்ற விவகாரங்களால் தான் அதன் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது என இளவரசர் சல்மான் கருதிய காரணத்தினால் தான் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப் பட்டதாகவும் இது உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளதாகவும் அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Home
»
World News
»
சவுதியில் ஊழல் குற்றவாளிகள் மீது அதிரடி நடவடிக்கை! : சொத்தை ஒப்படைக்குமாறு உத்தரவு
Sunday, November 19, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment