ஜெயலிலதா அக்டோபர் மாதமே உயிரிழந்துவிட்டார் என்று திமுகவை சேர்ந்த டாக்டர் சரவணன் ஆதாரத்துடன் விசாரணை கமிஷனிடம் புகார் அளித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன்பின்னர், 75 நாட்கள் கழித்து டிசம்பர் 5-ம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவமனை தெரிவித்தது. ஆனால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் கூறிவந்தனர்.
இந்நிலையில், அவரது மரணத்தில் உள்ள சந்தேகங்களை கலைவதற்காக அமைக்கப்பட்ட, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் இன்று விசாரணையை தொடங்கியது.
அப்போது, திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் மற்றும் அவரது வழக்கறிஞர் நேரில் சென்று ஆவணங்களை சமர்பித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர்கள் கூறியதாவது:
ஜெயலலிதா மரணம் குறித்து எழுந்துள்ள சந்தேகங்களை நாங்கள் விசாரணை கமிஷனிடம் புகாராக அளித்துள்ளோம். திருப்பரங்குன்றம் இதைத்தேர்தலின் போது, படிவம் 'எ'வில் 4 இடங்களிலும், படிவம் 'பி'யில் ஒரு இடத்திலும் ஜெயலலிதா கை ரேகை வைத்துள்ளார்.
பொதுவாக ஒருவரின் கை ரேகையில் ரேகை வரிவரியாக தெரியும். ரேகையில் உயிரோட்டம் இருக்கும். ஆனால், ஜெயலலிதா வைத்திருந்த கை ரேகையில் உயிரோட்டம் இல்லை. உயிரோடு இல்லாமல் இருந்தால் மட்டுமே ரேகை வரிகள் இருக்காது.
அதனை உறுதி செய்ய தடவியல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று மனு அளித்துள்ளோம். ஜெயலலிதா அக்டோபர் 27-ம் தேதிக்கு முன்பே இறந்திருப்பார்.
அக்டோபர் 11-ம் தேதி ஓபிஎஸ் பதவியேற்கும் போது, ஜெயலலிதா உயிரிழந்ததை மறைந்துவிட்டு கை ரேகை பெறப்பட்டது என்று புகாராக அளித்துள்ளோம்.
இந்த விசாரணை நாளையும் நடைபெறும். அப்போது கூடுதல் ஆவணங்களை சமர்பிக்கவுள்ளோம் என்று கூறினர்.
Home
»
Tamizhagam
»
ஜெயலிலதா அக்டோபர் மாதமே உயிரிழந்துவிட்டார் : ஆதாரத்துடன் டாக்டர் சரவணன் பரபரப்பு புகார்..!!
Thursday, November 23, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment