சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சிறை அதிகாரிக்கு ரூ.2 கோடி இலஞ்சம் வழங்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக மீள் விசாரணைக்கு உத்தரவிட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற அ.தி.மு.க.(அம்மா) அணி பொதுச் செயலாளர் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகளை ஒதுக்கி சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா பரபரப்பு புகார் கூறினார். இதற்காக சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்தியநாராயணராவ் ரூ.2 கோடி இலஞ்சம் வாங்கியதாகவும் அவர் குற்றம்சாட்டி இருந்தார்.
அதைத்தொடர்ந்து சசிகலாவுக்கு வழங்கப்பட்ட வசதிகள் ரத்து செய்யப்பட்டன. 2வது மாடியில் சசிகலா, இளவரசிக்கு சாதாரணமான ஒரு அறை ஒதுக்கப்பட்டது. சிறை முறைகேடுகள் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் ஒரு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. கடந்த வாரம் கர்நாடக அரசிடம் உயர்மட்டக்குழு அறிக்கையை தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையில், சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்தது உள்பட சிறையில் முறைகேடுகள் நடந்தது உண்மையே என்று கூறப்பட்டு உள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்த டி.ஐ.ஜி. ரூபா, “சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் கைமாறிய விவகாரம் குறித்து ஊழல் தடுப்பு படை மூலம் விசாரணை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இந்தநிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இனி சசிகலா உள்பட யாருக்கும் மிக முக்கிய பிரமுகர்களுக்கான வசதிகள் வழங்கப்பட மாட்டாது. சசிகலா தண்டனை காலம் முடியும் வரை சாதாரண சிறை கைதியாக தான் நடத்தப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி இலஞ்சம் கைமாறிய விவகாரம் குறித்து மீண்டும் புதிதாக விசாரணைக்கு உத்தரவிட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
Home
»
Tamizhagam
»
சசிகலா சிறையில் இலஞ்சம் வழங்கிய விவகாரம்; மீள் விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவு!
Friday, November 17, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment