தாயக விடுதலைக்காகத் தமது உயிர்களை ஆகுதியாக்கிய வீரமறவர்களை இன்று நினைவு கூர்வதற்குத் தாயக தேசத்து மக்கள் எழுச்சியுடன் தயாராகியுள்ளனர்.
மாவீரர் துயிலும் இல்லங்கள், நினைவுத் தூபிகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்பவற்றில் இன்று மாலை மாவீரர் நாள் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவீரர் துயிலும் இல்லங்கள் சிவப்பு -– மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
மாவீரர் எழுச்சிக் கீதங்கள் இன்று காலையிலிருந்து ஒலிக்க விடப்படுகின்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தாயக தேசத்தில் நிலை கொண்டிருந்த போது கடைப்பிடிக்கப்பட்டதைப் போன்று, இந்த ஆண்டு மாவீரர் நாளைக் கடைப்பிடிக்க ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
Monday, November 27, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment