Friday, November 10, 2017

கவர்ச்சி நடிகையான நமிதா 2004ஆம் ஆண்டு வெளியான விஜயகாந்த் நடித்த’ எங்கள் அண்ணா’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகி அடுத்து,” ஏய், இங்கிலிஷ்காரன், மகா நடிகன்,பில்லா,அழகிய தமிழ் மகன்” போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் அதிகமான கவர்ச்சி காட்டி ரசிகர்களை ஈர்த்தவர். சொந்த ஊரான குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த இவர் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் மற்றும் இந்திப் படத்திலும் நடித்துள்ளார். பின்பு அரசியலிலும் கால் பதித்தார்.

சமீபகாலமாக நடிகர் பரத்துடன் நடிக்கும் பொட்டு படத்தைத் தவிர எந்தப் படமும் கைவசம் இல்லாத காரணத்தினால் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சில ஆண்டுகளாக ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் நடுவராகக் கலந்துகொண்ட நமிதா, பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டார். இந்நிலையில் நமிதாவுக்கும், அவருடைய நண்பரான வீரேந்திர செளத்ரிக்கும் வருகிற 24ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக பிக் பாஸ் புகழ் நடிகை ரைசா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த வீரா, தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ளார். இவர்களது திருமணம் திருப்பதியில் நடைபெற உள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer