மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொண்டு, மாகாண சபைகளுக்கான தேர்தலை கலப்பு (விகிதாசார முறை மற்றும் தொகுதி) முறையில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைவாக தேர்தல் தொகுதியை நிர்ணயம் செய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எல்லை நிர்ணய குழுவொன்றை நியமித்துள்ளார்.
கலாநிதி கே.தவலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில், கலாநிதி அனிலா டயஸ் பண்டாரநாயக்க, பேராசிரியர் எஸ்.எச்.ஹிஸ்புல்லா, பி.எம்.சிறிவர்த்தன, எஸ்.விஜயசந்திரன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
தேர்தல் தொகுதியை நிர்ணயம் செய்வது தொடர்பில் அரசியல் கட்சிகள், பொது மக்கள் அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இக்குழு கோரியுள்ளது.
இதற்கமைவாக பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமொன்று குருணாகல் மாவட்ட செயலத்தில் இன்று காலை எட்டு மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறவுள்ளது. மற்றுமொரு கூட்டம் பிற்பகல் 2.30 முதல் மாலை ஆறு மணி வரை புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெறும்.
மாகாண சபை எல்லை நிர்ணயம் குறித்து ஆர்வம் கொண்டுள்ள பொதுமக்கள், அரசியல் கட்சிகள், ஏனைய அமைப்புக்கள் இதன்போது தமது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்க முடியும். அனுராதபுரம், திருகோணமலை, பொலநறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதுடன் ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறான கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
Home
»
Sri Lanka
»
மாகாண சபைகளுக்கான தேர்தலை கலப்பு முறையில் நடத்த அரசு முடிவு; தொகுதி நிர்ணயத்துக்கு குழு அமைப்பு!
Sunday, November 19, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment