சசிகலா, தினகரன், சசிகலாவின் கணவர் நடராஜன், சகோதரர் திவாகரன், அண்ணன் மனைவி இளவரசியின் மகன் விவேக் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்கள், எஸ்டேட்டுகள் உள்ளிட்ட 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். வியாழக்கிழமை தொடங்கி இன்று 3வது நாளாக வருமான வரி சோதனை தொடருகிறது.
இது தொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடா விஜயதாரணி, மூன்றாவது நாளாக வருமான வரித்துறையின் சோதனை இன்றும் கூட சில இடங்களில் தொடர்ந்து வருகிறது. இந்த ரெய்டுகள் அச்சுறுத்தல் கொண்டது. உள்நோக்கம் கொண்டதுதான். இந்த ரெய்டு நடத்த வேண்டிய அவசியம் என்ன என்ற சந்தேகம் எழுகிறது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வத்தையும் கடும் டென்ஷனில் தான் மத்திய பாஜக அரசு வைத்துள்ளது. அவர்கள் மேலேயும் எந்த நேரத்திலும் வழக்குகள் பாயும் என்பது பார்க்கப்படுகிறது. அதனால்தான் அவர்களை அடிமைகளாக வைத்துள்ளனர்.
தினகரன் தரப்புகளை பயமுறுத்திக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஜெயா டிவியை வைத்து எதிர்ப்புகளை பதிவு செய்தததால் ரெய்டு செய்கின்றனர். அதிமுகவில் யாரும் தப்பிக்காத அளவுக்கு பாஜக தன் காய்களை நகர்த்துகிறது. ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் என எல்லாரையும் அச்சுறுத்துகிறது. இவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் பாஜகவில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் தினகரன் ஒருவர்தான் மாட்டவில்லை. ஆகையால் மாட்ட வைப்பதற்கான திட்டம்தான் 187 இடங்களில் ரெய்டு. இந்த ரெய்டு பட்டவர்த்தமாக தெரிகிறது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் போல அடிபணியாததால், அடிபணிய வைப்பதற்கான எடுக்கும் நடவடிக்கையாக தெரிகிறது. இவ்வாறு கூறினார்.
nakkheeran
Saturday, November 11, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment