Tuesday, November 7, 2017

அண்டை மாநிலமான பாண்டிச்சேரியில் சொகுசு கார் வாங்கினால், வரியில் பெருமளவு மிச்சம் பிடிக்கலாம் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. எங்காவது யாராவது மட்டும் சிக்கிக் கொள்வார்கள்.

ஆனால் கேரளாவில் இருக்கும் முன்னணி ஸ்டார்கள் இதே பிழைப்பாக இருந்திருக்கிறார்கள் என்பது இப்போது தெரிய வந்திருக்கிறது.

அமலாபால் பென்ஸ் கார் வாங்கிய விவகாரத்தில் சிக்கிக் கொண்டார். சுமார் 10 லட்சம் வரை வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக கூறுகிறது அதிகாரிகள் டீம்.

ஏழு வருடங்கள் சிறை தண்டனை கிடைக்கலாம் என்றும் பீதியை கிளப்புகிறார்கள்.

இவரை அடுத்து வருமானவரித்துறை பகத் பாசிலுக்கு குறி வைத்திருக்கிறது.

அவரும் பாண்டிச்சேரி ரிஜிஸ்திரேஷன் வண்டியை போலி முகவரி கொடுத்து வாங்கியிருக்கிறாராம்.

இதையடுத்து பல ஸ்டார்கள் மனக் கலக்கத்தில் இருக்கிறார்கள். ஏன்? லிஸ்ட் நீண்டுகொண்டே போகிறதே… அதனால்தான்!

0 comments :

Post a Comment

 
Toggle Footer