Saturday, November 25, 2017

காலா படப்பிடிப்பில் ஒரு சுவாரஸ்யம். ரஜினி படப்பிடிப்புக்கு வருகிற நாட்களில் மட்டும் முழு பேண்ட், சட்டை சகிதம் வரும் டைரக்டர் பா.ரஞ்சித், அவர் இல்லாத நாட்களில் ஆளே வேறு மாதிரி வருகிறாராம். பெரிய கருப்புக் கண்ணாடி.

ஷாட் படமாகிக் கொண்டிருக்கும் போது கூட இந்த கண்ணாடியை கழற்றுவதில்லை. அப்புறம் முக்கால் பேன்ட். மேலே டி ஷர்ட் என்று படுபயங்கர வித்தியாசமாக இருக்கிறாராம். ஆணையிடுவதும் கூட ஆபாச சொற்கள் கலந்துதான் என்கிறார்கள். ‘ரஜினி சார் தினம் தினம் வந்தால் நல்லாயிருக்கும்.

இல்லேன்னா இந்த அட்ராசிடியை காது கொடுத்துக் கேட்கவோ, கண்கொண்டு பார்க்கவோ திராணியே இல்லை’ என்கிறது  ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் வட்டாரம்.  கொம்பு முளைப்பது நல்லது. ஆனால் முளைக்கிற இடத்தில் கட்டி வராமல் காப்பாற்றிக் கொள்வது அதைவிட நல்லதில்லையா?

0 comments :

Post a Comment

 
Toggle Footer