பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளிலிருந்தே வெளியே பரபரப்பாக பேசப்பட்டவர் ஜூலி. கேலி, கிண்டல்கள், மீம்ஸ் என ஒரு பக்கம் இருந்தாலும் திறமையானவர் என்று சகபோட்டியாளர்களிடம் பெயர் எடுத்தவர்.
தற்போது ஆரம்பித்துள்ள ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியில் இவர் தொகுப்பாளராகி விட்டார். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த சஞ்சீவ்க்கு சற்று ஓய்வு தேவைப்பட்டதாம்.
புதிதாக ஒருத்தருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்ற நினைத்த போது ஜூலியை ஓகே செய்துவிட்டாராம் கலா மாஸ்டர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி தான் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகவேண்டும் என்ற ஆசையை சொல்லியிருந்ததை சொன்னதை நோட் பண்ணியிருக்கிறார் மாஸ்டர்.
ஜூலி ஒரு காலேஜில் டான்ஸ் ஆடிவிட்டு வெளியே வந்தபோது மாஸ்டர் நேரில் இதுபற்றி அவரிடம் பேசினாராம். அப்போது ஜூலி அவரிடம் எல்லோரும் என்னை குறையாகவே பார்க்கும் போது நீங்க அது பற்றி எதுவும் கேட்கவில்லையே என கேட்டாராம்.
அதற்கு மாஸ்டர் மற்றவர்களுடையே கமெண்ட்ஸ் எனக்கு தேவையில்லை. திறமையை வெளிக்காட்ட ஒரு வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறேன். அதை பயன்படுத்தி குறைகளை சரிசெய்து பாசிட்டிவ் ஆக்கிவிடுங்கள் என மாஸ்டர் சொன்னதும் ஜூலி கண் கலங்கி அழுதுவிட்டாராம்.
முதல் நாள் எபிசோடை டான்ஸ் உடன் ஆரம்பித்து சிறு சிறு பதற்றங்கள் இருந்தாலும் சரியாக செய்துவிட்டாராம். அதை பார்த்து அவருடைய அம்மா, அப்பா பெருமையுடன் நன்றி சொல்ல கலா மாஸ்டர் கண் கலங்கிவிட்டாராம்.
மேலும் ஜூலியின் மனது புண்படும் படி யாரும் பேசக்கூடது என ரூல்ஸ் போட்டுள்ளாராம்.
Wednesday, November 1, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
I love u Julie baby umwaaaaaaaaaaaaa
ReplyDelete