போயஸ் கார்டனில் ரெய்டு நடத்திய வருமான வரித்துறை அதிகாரியான முரளிகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, "போயஸ் கார்டனில் விவேக், பூங்குன்றன், சசிகலா ஆகியோரது நான்கு அறைகளை சோதனை செய்தோம். அதில் பென் டிரைவ், டேப்ளாய்டு, லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம். இதுவரை நாங்கள் கண்டுபிடித்ததில் சுமார் 80 கம்பெனிகளை சசிகலாவும் அவர்களது பினாமிகளும் நடத்தி வருகிறார்கள்'' என சொல்லியிருக்கிறார். அடுத்த கட்டமாக இன்னும் ரெய்டுகள் தொடரும். "சசிகலாவையும் இளவரசியையும் பெங்களூரு சிறைக்கு போய் விசாரிக்கப் போகிறோம்.
இந்த 80 போலி கம்பெனிகளுக்கும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அதன் வங்கிக் கணக்குகளில் பணம் எப்படி வந்தது. சுனில் கேட்பாலயா, அன்புநாதன் போன்றவர்கள் மூலம் வெளிநாட்டு பணம் வந்ததா? என ஆய்வு செய்கிறோம். வெளிநாட்டு பணம் புழங்கிய கம்பெனிகள் விஷயத்தில் இந்த கம்பெனிகள் சம்பந்தப்பட்டிருக்குமானால் வருமான வரித்துறை அந்த விவரங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்துவிடும். சசிகலா, இளவரசி, விவேக், கிருஷ்ணப்ரியா, ஷகிலா போன்ற சசி குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கைகளை மேற்கொள்வோம்'' என்கிறார்கள் வருமான வரித்துறையைச் சேர்ந்தவர்கள்.
nakkheeran.in
Thursday, November 23, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment