சினிமா நடிகர், நடிகைகளுக்கு சேர்ந்து வாழ்வது, பிரிந்து வாழ்வது, விவாகரத்து செய்வது எல்லாம் சகஜமான விஷயம். அதிலும் லிவ்விங் டூகெதர் என்ற பெயர் முறை வேறு.
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தவர் தொகுப்பாளினி லேகா வாஷிங்டன். ஆங்கில சானலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியவர்.
உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், கல்யாண சமையல் சாதம், அரிமா நம்பி படங்களிலும் நடித்துள்ளார். சில ஆல்பங்களிலும் பாடியுள்ளாராம்.
இவரும் மும்பையை சேர்ந்த பத்திரிக்கையாளர் பப்லோ சட்டர்ஜியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இருவரும் லிவ்விங் டு கெதர் முறையில் மும்பையில் தனி வீட்டில் சேர்ந்து வாழ்ந்துவந்தார்கள்.
இந்நிலையில் இருவரும் வரும் 18 ம் தேதி மும்பை, அலிபாக்கில் பதிவு செய்துகொள்கிறார்களாம். லேகா கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர் என்பதாலும், பப்லோ இந்து மதத்தை சார்ந்தவர் என்பதால் பொதுவான முறைப்படி திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்துவிட்டார்களாம்.
Home
»
Cinema News
»
பல நாட்கள் அவருடன் சேர்ந்து வாழ்ந்த நடிகைக்கு, திடீர் திருமணம்.. யாருடன் தெரியுமா?
Tuesday, November 14, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment