ஆயுதங்களே ஆடை
துவக்குகளே துடுப்பு
குருதிக் கடலில் நீச்சல்
சைனைடு குப்பியே
அணிகலன்..
பதுங்கு குழியே
பயிற்சித்திடல்.
.
பாயும் புலியாய்
சீறும் உடல்…
மரணம் முன்
மண்டியிடாது நிமிர்ந்து
எதிரி எழுந்தால்
ஏறி மிதித்து
புயலை- எரிமலையை
இரு கையில் ஏந்தி
இருளை எரிக்க
எழுந்து வருவது..
தமிழீழக் கனவை
தாகமாய் எழுதி
தாய் மண் மடியில்
விதையாய் விழுந்து
செங்காந்தாள் மலராய்
நிமிரும் அடையாளம்
எங்கள் மாவீரர்….
இனத்திற்கு
உயிரை கொடை செய்து
விடுதலை விடியலுக்கு
விழிகள் தந்து
உடலில் உருண்ட
உயிரை மண்ணுக்காக
மட்டுமே
பயிரிட்டவர்கள்
எங்கள் மாவீரர்கள்
இது
விடுதலையின் காலம்
இரத்தக் கறையின்
வரலாறு..
செத்துப்போகாது…
இனம் காக்கவே
விதை ஆனவர்கள்
இனி
களம் காணவே வருவார்கள்..
அறமோ…ஆயுதமோ
ஆனாலும் அணிவகுப்போம்!
போர்க் காலத்தில்
புதைந்து
கார்காலத்தில் நிமிரும்
கார்த்திக்கைப்பூ போல
வருவார்கள் மாவீரர்கள்
தமிழீழம் எழுந்துவருகிற
அடையளமாய்!!!
Monday, November 27, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment