விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 63வது பிறந்ததினத்தை கொண்டாடிய இளைஞன் ஒருவர் பொலிஸாரினால் இன்று விசாரிக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் அணியின் செயலாளர் பீற்றர் இளஞ்செழியன் என்பவரையே பொலிஸார் இவ்வாறு விசாரித்துள்ளனர். கடந்த 26 ஆம் திகதி முல்லைத்தீவு கடற்கரையில் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் ஒன்றை காட்சிப்படுத்தி பிறந்ததினம் கொண்டாப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவரது பிறந்ததினத்தை கொண்டாடுவது சட்டவிரோதமான செயல் என்று கூறிய முல்லைத்தீவு பொலிஸார், குறித்த இளைஞரிடம் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Thursday, November 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment