‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தின் படு தோல்விக்கு பின்பும், தேள் தன் கொடுக்கை நீட்டிக் கொண்டு கெக்கெக்கே... என்று சிரிப்பதை போல படு ஜோராக சிரித்துக் கொண்டிருக்கிறார் அப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.
ஐயோ பாவம்... இது விரக்தி சிரிப்பு. அந்தப்படத்தின் தோல்வியை ரிலீஸ் ஆன ஒரு ஷோவிலேயே அறிந்து கொண்டார் சிம்பு. அதற்கப்புறம் வந்த விமர்சனங்கள், பத்து பாத்திர கழுவலுக்கு சற்றும் குறைவானதாக இல்லை. அந்த நேரத்தில் ஆதிக்கை அழைத்த சிம்பு, “கவலைப்படாதய்யா... திரும்பவும் நான் உனக்கு கால்ஷீட் தர்றேன்” என்றார். ஆனால் ‘நேற்றோடு நீ சொன்ன பேச்சு, காற்றோட போயாச்சு’ கதையாகிவிட்டது அது. சிம்புவை தொடர்பு கொள்ளவே முடியவில்லையாம் இவருக்கு. என்ன செய்வார்? தினந்தோறும் ட்விட்டரில் வந்து புலம்பிக் கொண்டிருக்கிறார்.
Saturday, November 18, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment