பிக் பாஸ் வீடு களை கட்டப் போகிறது. யெஸ்... அதே வீட்டில் அல்ப சொற்ப காலம் குடியிருந்த நமீதாவுக்கு திருமணம் முடிவாகியிருக்கிறது. அதைவிட முக்கியமான கல்யாணம் இன்னொன்று. பல வருடங்களாகவே தன் திருமணத்தை தள்ளி தள்ளிப் போட்டு வந்த கவிஞர் சினேகனுக்கும் திருமணம் நிச்சயம் ஆகியிருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரது சமையல் நுணுக்கத்தையும், பிறரை அணுசரித்துப் போகும் அழகையும் ரசித்த கோடீஸ்வர பெண் ஒருவர், தன் வீட்டில் சொல்லி முறைப்படி மாப்பிள்ளை பார்த்து இந்த திருமணம் முடிவாகியிருக்கிறதாம். தன்னை தொலைக்காட்சி பெட்டியில் பார்த்தே காதலித்து வந்த அந்த பெண்ணை, காதல் மனசோடு நோக்க ஆரம்பித்துவிட்டாராம் சினேகனும். கல்யாணம் மட்டும் சென்னையில் இல்லை. ஏன்? பொண்ணு வெளிநாடுங்க...!
Saturday, November 18, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment