எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 5 ஆம் திகதி ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை அளிக்கவுள்ளார். முதற்கட்டமாக அவரின் அரசியல் ஆலோசகரும் மகளுமான இவாங்கா டிரம்ப் இன்று வெள்ளிக்கிழமை டோக்கியோவை வந்தடைந்துள்ளார்.
டிரம்பின் வருகையை ஒட்டி டோக்கியோ நகரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குக் கீழ் கொண்டு வரப் பட்டுள்ளது.
தலைநகர் டோக்கியோவில் சுமார் 18 000 போலிசார் உச்சக் கட்டப் பாதுகாப்பில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். ஜப்பானின் டோக்கியோ நகருக்கு உத்தியோகபூர்வ விஜயமாக முன்னதாக 2014 ஆம் ஆண்டு முன்னால் அதிபர் பாரக் ஒபாமாவும் அதற்கு முன்பு 2002 ஆம் ஆண்டு முன்னால் அதிபர்ஜோர்ஜ் W புஷ் உம் வருகையளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய ரீதியில் அதிகரித்துள்ள தீவிரவாதத் தாக்குதல்கள் மற்றும் மற்றும் கொரியத் தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்ற நிலை என்பவை காரணமாகவே ஜப்பானில் அதிபர் டிரம்புக்கு இந்தளவுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப் பட்டுள்ளன.
Home
»
World News
»
ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் : உச்சக் கட்டப் பாதுகாப்பு!
Saturday, November 4, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment