ரேக்கிங்கில் ஈடுபட்ட மற்றும் அதற்கு துணை நின்ற 54 மருத்துவக் கல்லூரி மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் தலா 25,000 ரூபாய் அபராதம் விதித்து ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.
தர்பான்காவில் இருக்கும் தர்பாங்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இரண்டாமாண்டு மருத்துவ மாணவிகள் முதலாமாண்டு மாணவிகளை ரேக்கிங் செய்ததாக இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு புகார் எழுந்துள்ளது.
இந்தப் புகாரின் அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் ஜூனியர் மற்றும் சீனியர் மாணவிகளிடம் ரேக்கிங் பற்றி விசாரணை நடத்தியது. அப்போது ஜூனியர் மாணவிகள் ரேக்கிங் சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று கூறி ரேக்கிங் செய்தவர்களை அடையாளம் காட்ட மறுத்துள்ளனர்,
இதனையடுத்து, கல்லூரி முதல்வர் ரேக்கிங் செய்த சீனியர் மாணவிகள் மற்றும் அதை மறைத்த ஜூனியர் மாணவிகள் 54 பேருக்கு ஆளுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். வரும் 25 ஆம் தேதிக்குள் இந்த அபராதத்தைக் கட்டவில்லையெனில் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Monday, November 20, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment