செவ்வாய்க்கிழமை வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 50 பேர் பலியாகி உள்ளனர். இத்தாக்குதலின் பின்னணியில் போக்கோ ஹராம் போராளிகள் உள்ளதாகப் போலிசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
நைஜீரியாவின் அடமாவா மாகாண்த்திலுள்ள மூபி என்ற நகரில் மதீனா பள்ளியில் காலைப் பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இந்த தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இந்த கொடூரத் தாக்குதலில் நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.
காயமுற்றவர்களில் பலர் மோசமான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப் படுகின்றது.நைஜீரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் போக்கோ ஹராம் தீவிரவாத அமைப்பினால் 2009 முதல் மேற்கொள்ளப்பட்ட மோசமான தாக்குதலில் இதுவரை 20 000 பேர் கொல்லப் பட்டும் 2.6 மில்லியன் பேர் வீடுகளை இழந்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Thursday, November 23, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment