கடந்த புதன்கிழமை தெற்கு அட்லாண்டிக் கடலில் 44 குழு உறுப்பினர்களுடன் சென்ற ஆர்ஜெண்டினாவின் நீர்மூழ்கிக் கப்பல் மாயமாகி உள்ளது. ARA San Juan என்ற இந்த நீர்மூழ்கிக் கப்பல் இறுதியாக புதன்கிழமை சான் ஜோர்ஜ் வளைகுடாவில் தென்பட்டதாக அந்நாட்டுக் கப்பற் படை தெரிவித்துள்ளது.
தற்போது இந்த நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணியில் அமெரிக்கக் கப்பற் படை தனது உதவியை வழங்கி வருகின்றது. தேடும் பணி ஆகாய மார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் இடம்பெற்று வருகின்றது. படகோனியன் கடற் பகுதியில் இருந்து புறப்பட்ட இந்நீர்மூழ்கி நாளை ஞாயிற்றுக் கிழமை ஆர்ஜெண்டினாவின் மார் டெல் ப்லாட்டா என்ற நகரினை நோக்கி வரவிருந்த நிலையில் தான் காணாமற் போயுள்ளதுடன் ரேடார் தொடர்பும் துண்டிக்கப் பட்டுள்ளது. தற்போது இந்நீர்மூழ்கியினைத் தேடும் பணியில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சிலி ஆகிய நாடுகளின் கப்பற் படையும் தமது உதவியை அளித்து வருகின்றன.
இதேவேளை ஆர்ஜெண்டினாவை பூர்வீகமாகக் கொண்ட பாப்பரசர் பிரான்சிஸ் தனது தேசத்தைச் சேர்ந்த காணாமற் போயுள்ள பணியாளர்களுக்காகத் தான் பிரார்த்திப்பதாகவும் விரைவில் அவர்கள் மீட்கப் படுவார்கள் என நம்பிக்கையுடன் இருக்குமாறு அவர்களின் குடும்பத்தினரிடன் கோரிக்கை வைப்பதாகவும் வத்திக்கானில் இருந்து செய்தி வெளியிட்டுள்ளார்.
Sunday, November 19, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment