485 மில்லியனுக்கும் 445 மில்லியனுக்கும் இடைப்பட்ட வருடங்களில் எமது பூமியின் வளி மண்டலத்தில் நிலவிய மிகை ஆக்ஸிஜன் காரணமாக புவியில் உயிர்ப் பல்வகைமை பல்கிப் பெருகியதாக புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது. முக்கியமாக ஆங்கிலத்தில் Great Ordovician Biodiversification Event என்று இக்காலப் பகுதி அழைக்கப் படுகின்றது.
இக்காலப் பகுதியில் கடலுக்கு அடியில் உயிர்ப் பல்வகைமை அதிகரித்ததாகவும் ஏனைய உயிரினங்களது குடும்பங்கள் மற்றும் வகைகள் என்பன ஏற்பட்டதாகவும் இது பூமியிலேயே ஏற்பட்ட முக்கிய மாற்றமும் ஆகும் எனவும் விளக்கப் பட்டுள்ளது. வாஷிங்டன் பல்கலைக் கழக விஞ்ஞானியான கோல் எட்வார்ட்ஸ் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். ஆயினும் இக்காலப் பகுதியில் மனித இனம் தோன்றவில்லை என்றும் மனித இனம் தோன்றிய காலத்தில் நிலவிய ஆக்ஸிஜன் ஏற்றம் வேறு வகையானது என்றும் கூட இவர் தெரிவித்துள்ளார்.
இருந்த போதும் 455 மில்லியன் வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட இந்த உயிர்ப் பல்வகைமைக்கு ஆக்ஸிஜன் ஏற்றம் மட்டும் காரணம் இல்லை எனவும் சமுத்திரங்களில் ஏற்பட்ட குளிர்ச்சி, கடலடியில் அதிகரித்த ஊட்டச் சத்து, வேட்டையாடுவதற்கு ஏற்ற சமநிலை என்பவவும் கூட காரணம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. கடலுக்கு அடியிலும் பாறைகளிலும் ஏற்பட்ட வேதியியல் மாற்றப் பதிவுகள் மூலம் கிடைக்கப் பெற்ற மிக நுண்ணிய தகவல்கள் மூலம் தான் இந்த மிகை ஆக்ஸிஜன் காலப் பகுதி கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
மேலும் ஆக்ஸிஜன் ஏற்றம் காரணமாக இன்றைய உயிர் வாழ்க்கை ஏற்பட மில்லியன் ஆண்டுகள் தேவைப் பட்டதாகவும் கூடக் கணிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Home
»
World News
»
400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் காரணமாக உயிரினம் பல்கிப் பெருகியது! : புதிய ஆய்வு
Monday, November 27, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment