சனிக்கிழமை சீன நேரப்படி காலை 6.34 இற்கு திபேத்தின் அருணாச்சலப் பிரதேச மாநில எல்லைக்கு அருகே உள்ள நிஞ்சி பகுதியில் 6.9 ரிக்டர் அளவுடைய வலிமையான நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து 4 தடவை வலிமையான தொடர் அதிர்வுகள் பதியப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அருணாச்சலப் பிரதேசத்தில் அலாங், பசிகாட், தேஜு ஆகிய நகரங்களிலும் ராஜஸ்தான் மாநிலத்தின் சில பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப் பட்டுள்ளது. அதிகபட்ச அதிர்வு நிலத்துக்கு அடியில் 10 Km ஆழத்தில் ஏற்பட்டதாகவும் இதில் பல வீடுகளும் கட்டடங்களும் இடிந்து விழுந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தானின் ஜோத்பூரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நில அதிர்வு 4.2 ரிக்டரில் பதிவானதுடன் சில நொடிகள் நீடித்ததாகவும் கூறப்படுகின்றது. இதனால் பொது மக்கள் பதற்றமடைந்த போதும் பாரிய உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாகவோ பலத்த சேதம் ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Home
»
World News
»
திபேத்தில் அடுத்தடுத்து 4 தடவை நிலநடுக்கம்! : அதிகபட்சமாக 6.9 ரிக்டர் அளவுகோலில் பதிவு
Monday, November 20, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment