Thursday, November 30, 2017

மேஷம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப் பான்மையும் வந்து நீங்கும். சகோதர வகையில் மனத் தாங்கல் வரும். அசதி, சோர்வு வரக்கூடும். வியாபாரம் சுமாராக இருக் கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். மதியம் 12.52 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானம் தேவைப்படும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபா ரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத் தில் உங்கள் கை ஓங்கும். இனிமையான நாள்.

மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்த வர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக் கும். மதிப்புக் கூடும் நாள்.

கடகம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். எதிர்பார்த்த இடத்தி லிருந்து நல்ல செய்தி வரும்.வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். மகிழ்ச்சி தங்கும் நாள்.

சிம்மம்: மதியம் 12.52 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். தடைப்பட்ட வேலைகளை விடாமுயற்சியால் முடிப்பீர்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.

கன்னி: கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். தாயாரின் உடல் நலம் சீராகும். புது நட்பு மல ரும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் லாபம் வரும். அலுவல கத்தில் அமைதி நிலவும். மதியம் 12.52 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

துலாம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். நாடி வந்தவர் களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோ கத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தொட்டது துலங்கும் நாள்.

விருச்சிகம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர் களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத் தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். கனவு நனவாகும் நாள்.

தனுசு: ஒரு பக்கம் சோர்வு, களைப்பு என இருந்தாலும் மறுபக்கம் விடா முயற்சி, கடின உழைப்பால் வெற்றி பெறுவீர்கள். பழைய கடனை பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபா ரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

மகரம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உற வினர்களால் அனுகூலம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத் தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள் வீர்கள். வெற்றி பெறும் நாள். 

கும்பம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். அழகு, இளமை கூடும். எதிர் பார்த்த வகையில் பணம் வரும். சகோதரங்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

மீனம்: மதியம் 12.52 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் அவசர முடிவு களை தவிர்ப்பது நல்லது. யோகா, தியானம் என மனம் செல்லும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து அதிகம் யோசிப்பீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer