Monday, November 27, 2017

மேஷம்: ஆன்மிகப் பெரியோ ரின் ஆசி கிட்டும். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள் அரசாங்க விஷயங்கள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக் கைகள் நிறைவேறும். முயற்சிகள் பலித மாகும் நாள்.

மிதுனம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். எதிர் பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர் கள் மதிப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

கடகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சிறு வார்த்தை கள் கூட பெரிய தகராறில் போய் முடியும். யாரும் உங்களை புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள். 

சிம்மம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வீட்டை அழகு படுத்துவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் அதிகாரி கள் வலிய வந்து உதவுவார்கள். நன்மை கிட்டும் நாள்.

கன்னி: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். அரசால் அனுகூலம் உண்டு. வியா பாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவு கள் எடுப்பார்கள். தொட்டது துலங்கும் நாள்.

துலாம்: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமை களை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். கடையை விரிவு படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.

விருச்சிகம்: புதிய கோணத் தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வரக்கூடும். விருந்தினர் வருகை அதிகரிக் கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் விமர் சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். பிரபலங்களின் நட்பு கிட்டும். அரசால் ஆதாயம் உண்டு. பிரியமானவர்களுக் காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார்.
வெற்றி பெறும் நாள்.

மகரம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வெளிவட்டா ரத்தில் மதிக்கப்படுவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங் களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மகிழ்ச்சியான நாள்.

கும்பம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். சிலர் உங்கள் வாயை கிளறிப் பார்ப்பார்கள். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

மீனம்: கணவன்-மனைவிக் குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer