Monday, November 6, 2017

மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். ஆடை, ஆபரணம் சேரும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்துப் போகும். நயமாகப் பேசுபவர்களை நம்பாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

மிதுனம்: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாக பேசப்பாருங்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கடகம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோ கத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.

சிம்மம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மதிப்புக் கூடும் நாள்.

கன்னி: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். எதிர்பாராத காரியங்கள் முடியும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

துலாம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுகொள்வார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு.வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.

தனுசு: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அமோகமான நாள்.

மகரம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். கனவு நனவாகும் நாள்.

கும்பம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பிள்ளைகளால் நிம்மதி அடைவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

மீனம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். சாதிக்கும் நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer