முரசொலி பத்திரிகையின் பவள விழாவை முன்னிட்டு, முரசொலி பத்திரிகை அலுவலகத்திற்கு இன்று காலை சென்ற கருணாநிதி அங்குள்ள அரங்கை பார்வையிட்டு திரும்பியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கருணாநிதிக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையிலும், அவரது இல்லத்திலும் மாறி மாறி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவருக்கு முற்றாக பேச்சுத் திறன் அற்றுப் போய்விட்டதாகவும் வதந்திகள் வெளிவந்தன. இந்நிலையில், டிரக்யாஸ்டாமி கருவி அவருக்கு மிக விரைவில் அகற்றப்படும் எனவும் பொதுக் கூட்டங்களில் மறுபடியும் உற்சாகமாக உரையாற்றுவார் எனவும் திமுக உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். முரசொலி பவளவிழாவை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் உகலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
Thursday, October 19, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment