கடந்த வருடம் உயிர் துறந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்ஜ்தேஜின் உடல் நேற்று வியாழக்கிழமை இலட்சக் கணக்கான மக்களின் கண்ணீர் பிரியாவிடைக்கு மத்தியில் தகனம் செய்யப் பட்டுள்ளது.
தாய்லாந்தில் மிக அதிக காலமாக 1946 ஜூன் 9 ஆம் திகதி முதல் சென்ற வருடம் ஆக்டோபர் 13 ஆம் திகதி இறக்கும் வரை தாய்லாந்தின் மன்னராக இவர் ஆட்சி புரிந்தார். இறக்கும் போது இவருக்கு வயது 88 ஆகும். பல ஆட்சிக் கவிழ்ப்புக்களுக்கு மத்தியில் மிகச் சிக்கலான அரசியல் களத்தில் ஆட்சி புரிந்து நவீன தாய்லாந்தை உருவாக்கிய பெருமை அரசர் பூமிபோலை சாரும். இதனால் கட்சி வேறுபாடின்றி ஒட்டு மொத்த தாய்லாந்து மக்களின் அன்பையும் ஆதரவையும் இவர் சம்பாதித்திருந்தார்.
இவர் மறைந்து சுமார் ஓராண்டு காலமாக துக்கம் அனுட்டிக்கப் பட்டு வந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை இவரது உடல் புத்த மத ஆசாரத்தின் படி தகனம் செய்யப் பட்டது. மேலும் கடந்த 5 நாட்களாக அரண்மனையிலும் இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப் பட்டிருந்தது. மேலும் நேற்று தாய்லாந்து முழுவதும் பொது விடுமுறை விடுவிக்கப் பட்டிருந்தது. தாய்லாந்தின் புதிய மன்னராக பூமிபோலின் மகனான 64 வயதாகும் வஜிரலோங்கோன் விரைவில் முடி சூட்டவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Saturday, October 28, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment