அண்மையில் சென்னைக்கு வந்திருந்தார் காஜல் அகர்வால். ‘குயின்’ படத்தின் தமிழ் ரீமெக் பிரஸ்மீட்டுகாகதான் இந்த ட்ரிப். இப்படத்தில் வசனம் எழுதும் பொறுப்பு பிரபல தமிழிலக்கியவாதியான தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய காஜல், இலக்கியத் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கும் தமிழச்சி மேடத்திற்கு வாழ்த்துக்கள் என்று கூறிவிட்டு அமர, அவர் ஏற்கனவே தமிழ் திரைப்படங்களில் பாடல்கள் எழுதியவர்தான் என்ற விளக்கம் அளிக்கப்பட்டது காஜலுக்கு.
அப்புறம்? தன் பெரிய விழியால் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியதோடு, தமிழச்சியின் கைகளை பிடித்துக்கொண்டு ‘ஸாரி’ என்றார்.
விருதுநகரிலிருந்து கிளம்பும் ஒரு பெண், தன் காதலனை தேடி உலகத்தின் வட முனைக்கே சென்று சேர்வதுதான் இந்த கதையாம்.
தமிழச்சியின் பேனா மிதமிஞ்சிய ஆணுரிமையின் தலையில் ஆணி அடிக்கும் போலதான் தெரிகிறது.
Thursday, October 5, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment