Tuesday, October 3, 2017

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அமேதி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என்று மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

உத்தர பிரேதசத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். காங்., துணைத் தலைவர் ராகுல், அமேதி தொகுதியில், நாளை முதல், மூன்றுநாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார். இந்நிலையில், அமேதியில் ராகுலின் வருகைக்கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து, அமேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: “தசரா பண்டிகையையொட்டி நடைபெறும், துர்கா சிலை கரைப்பு நிகழ்ச்சி மற்றும் மொகரம் பண்டிகை காரணமாக, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுஉள்ளனர். இந்த நேரத்தில், ராகுல், இங்கு வந்தால், அவருக்கு பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் ஏற்படலாம் என கருதினோம். அதனாலேயே, அவரின் வருகையை, ஓரிரு நாட்கள் தள்ளிப்போடும் படி அறிவுறுத்தினோம்.ராகுலின் வருகைக்கு, தடையேதும் விதிக்கவில்லை. திட்டமிட்டபடி, அவர் அமேதியில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளலாம்.” என்றுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer