Monday, October 30, 2017

கால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

சட்டவிரோதமாக கால்நடைகளை ஏற்றிச் செல்வது வேகமாக அதிகரித்துவருகிறது. இதன் மூலம் பாற்பண்ணைக் கைத்தொழில் துறைக்கும் விவசாயத் தேவைகளுக்கும் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில் கால்நடைகளை எற்றிச் செல்வது தொடர்பில் முறையான நிகழ்ச்சித்திட்டமொன்றைத் தயாரிக்கும்வரை அதற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது.

தற்போது கால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் பிரதேச செயலாளர்களினூடாகவே வழங்கப்படுகின்றன.

சட்டவிரோதமாக கால்நடைகளை ஏற்றிச் செல்லும்போது ஏற்படுகின்ற பாரதூரமான விபத்துக்கள், உயிர்ச்சேதங்கள் குறித்தும் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் குறித்தும் கடந்த காலத்தில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் பதிவாகியுள்ளன.

0 comments :

Post a Comment

 
Toggle Footer