பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டப் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு, வந்தாறுமூலை வளாக முன்றலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.
மாணவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம் விடுதி பகுதியிலிருந்து புறப்பட்டு, பிரதான வீதியோரம் நின்று தமது கோஷங்களை எழுப்பினர்.
அநுராதபுரத்தில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொள்ளும் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Home
»
Sri Lanka
»
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
Monday, October 23, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment