Thursday, October 19, 2017

கிழக்கு அண்டார்ட்டிக்காவில் காணப்படும் அடெய்லி என்ற பென்குவின் இனத்தைச் சேர்ந்த குட்டிகள் மிகப் பெரும் அளவில் இறந்து வருவதாகவும் இதனால் அவ்வினம் மிக வேகமாக அருகி வருவதாகவும் கடல் உயிரின ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் மாறி மாறி ஏற்படும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முடியாமலேயே இவ்வழிவு ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த 40 ஆண்டுகளில் உணவுப் பற்றாக்குறை காரணமாக இப்போது தான் இந்த அழிவு ஏற்படுவதாகவும் கூறப்படுகின்றது. அதாவது குறித்த இனத்தின் குட்டிகள் அதிகளவில் வாழும் பகுதியில் உணவு கிடையாது என்றும் தாய் இனம் உணவு தேடி வர ஏற்படும் கால தாமதத்தால் குட்டிகள் பட்டினியால் வாடி பெரும் தொகையில் இறந்து விடுவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

முன்னதாக 2013 மற்றும் 2014 இற்கு இடைப்பட்ட காலத்தில் இது போன்ற ஒரு இன அழிவு பென்குவின்கள் மத்தியில் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. அண்டார்டிக்காவில் மிக வேகமாக பனிக்கட்டிகள் உருகி வருவதும் பென்குவின்களுக்கு உணவு கிடைப்பதைப் பாதித்து வருவதால் தற்போது உலக வன உயிர் பாதுகாப்பு அமைப்பு இதில் தலையிட முன் வந்துள்ளது. மேலும் இவ்வாரம் அவுஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் சர்வதேச நாடுகள் பங்கேற்கும் மாநாடு ஒன்றையும் அந்த அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் பென்குவின்கள் இனம் அழிந்து விடும் என கடல் உயிரின ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer