புதிய அரசியலமைப்பினைத் தயாரிக்கும் பணி கண்ணிவெடிகளுக்கு மேல் நடப்பதைப் போன்றது. மிகவும் கவனமாக கையாள வேண்டியது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
“தற்பொழுது சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையானது, புதிய அரசியலமைப்பின் வரைபு என்றும், இது நாளைக்கே நிறைவேற்றப்படப் போவதாகவும் சிலர் எச்சரிக்கின்றனர். இந்த எச்சரிப்புக்கள் பிழையானவை.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெற்காசிய பிராந்தியக் கூட்டமைப்பு நாடுகளின் (சார்க்) சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் 08வது மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று புதன்கிழமை கொழும்பில் ஆரம்பமானது. அங்கு அங்குரார்ப்பன உரையை ஆற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அரசியலமைப்பு சபையில் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை புதிய அரசியலமைப்பு வரைபு அல்ல. அரசியல்வாதிகள் தவிர்ந்த ஏனைய பங்குதாரர்களுடனும் இடைக்கால அறிக்கை தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தி இணக்கப்பாடு எட்டப்பட்ட பின்னரே அரசியலமைப்பு வரைபு தயாரிக்கப்படும்.
புதிய அரசியலமைப்பை நாளைக்கே நிறைவேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக விடுக்கப்படும் எச்சரிக்கைகள் தவறானவை. இடைக்கால அறிக்கையானது உப குழுக்களின் நிலைப்பாட்டைத் தாங்கியதாகவே இருக்கின்றது.
அரசியலமைப்புக்கான வரைபைத் தயாரிக்கும் பணிகளில் அரசியல்வாதிகள் தவிர்ந்த ஏனைய பங்குதாரர்களுடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்படும். எதிர்வரும் ஜனவரி மாதத்தின் பின்னர் இந்தக் கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்க்கின்றோம்.” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
புதிய அரசியலமைப்பினை தயாரிக்கும் பணி கண்ணிவெடிகளுக்கு மேல் நடப்பதைப் போன்றது: ரணில்
Thursday, October 5, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment