தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை திருப்தியளிக்கவிலை என தெரிவித்து யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களைச் சேர்ந்த மாணவர்களும் இன்று வியாழக்கிழமை காலை முதல் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எதிர்வரும் 25ஆம் திகதி வரை வகுப்புப் புறக்கணிப்பைத் தொடரவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் 20 நாட்களுக்கும் மேலாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் உள்ளிட்ட குழுவினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், அந்தப் பேச்சுவார்த்தையின் போது, ஜனாதிபதி உறுதியான முடிவுகளைத் தெரிவித்திருக்கவில்லை.
Home
»
Sri Lanka
»
ஜனாதிபதியுடனான பேச்சில் திருப்தியில்லை; யாழ். பல்கலை மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு!
Friday, October 20, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment