கோலிவுட்டில் இளைய தளபதி விஜய்க்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அவரது மெர்சல் படம் பல சர்ச்சைகளை கிளப்பிருந்தாலும் வெற்றிகரமாக தான் திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது மெர்சல்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி புகழ் நடிகை ஆர்த்தியுடன் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் மோதி வருகின்றனர். ஆர்த்தி அஜித்தின் தீவிர ரசிகை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்பதால் இந்த மோதலில் ஆச்சர்யம் எதுவும் இல்லை என்றாலும், அவர் விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக பல்வேறு ட்விட்களில் விஜய்யை விமர்சித்துள்ளார்.
“சுறா படம் பார்த்த பிறகு நான் அஜித் ரசிகை ஆகிவிட்டேன்”, “அஜித்தால் எந்த தயாரிப்பாளருக்கும் நஷ்டமில்லை ஆனால் உங்களை வைத்து எடுத்த பல தயாரிப்பாளர்கள் எங்கனே தெரியல..” என பல்வேறு ட்விட்களில் ஆர்த்தி விஜய்யை நேரடியாகவே விமர்சித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் மட்டும் இல்லை அஜித் ரசிகர்களும் ஆர்த்தி மீது கடும் கோபத்தில் உள்ளார்கள்.
Home
»
Cinema News
»
ஆர்த்தி வீட்டில் கல்லடி நடத்த விஜய் ரசிகர்கள் பிளான்! அப்படி என்ன செய்தார் இவர்?
Monday, October 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment