பனை, தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்குவதற்கு தடை விதிக்கும் சட்டத் திருத்தமொன்றை அரசாங்கம் கொண்டுவரவுள்ளது. இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 20ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. புதிய சட்டத்திருத்தத்தின் பிரகாரம், கித்துள் மரம் தவிர்ந்த எந்த மரத்திலும் ‘கள்’ எடுப்பதற்கோ, இறக்குவதற்கோ தடை விதிக்கப்படவுள்ளது.
இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், வடக்கில் சீவல் தொழிலை நம்பி வாழும் சுமார் 12,000 குடும்பங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் வலிகாமம் கொத்தணித் தலைவர் எஸ்.செல்வராசா தெரிவித்துள்ளார்.
Monday, October 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment