சந்தானம் மற்றும் வைபவி சாண்டல்யா இணைந்து சக்க போடு போடு ராஜா படத்தை நடித்து முடித்துள்ளனர். சிம்பு இசை அமைத்திருக்கிறார் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி இயக்குனர் ஜி.எல்.சேதுராமன் கூறியதாவது: “சந்தானமும் நானும் தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த லொள்ளு சபா நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்த காலத்திலிருந்தே நண்பர்கள். அவருக்காகவே நான் எழுதிய கதைதான் சக்க போடு போடு ராஜா.
கதைப்படி ஹீரோ ஒரு பெரிய கோடீஸ்வரன் வீட்டு வாரிசு. தந்தைக்கு பிறகு கோடிக்கணக்கான சொத்துகளை அவர்தான் நிர்வகிக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருத்தர் தன் நண்பனுக்கு ஒரு பிரச்சினை என்று வருகிறபோது எல்லாவற்றையும் விட்டு விட்டு இறங்கி அடிப்பார். நட்புக்காக எந்த எல்லை வரைக்கும் செல்லலாம் என்பதுதான் படம் சொல்லுகிற செய்தி.
சந்தானம் முதலில் எல்லா பிரச்சினைகளையும் தனது புத்தியை கொண்டு தீர்த்து வைக்க நினைப்பார். அது முடியாத பட்சத்தில்தான் சக்தியை பிரயோகிப்பார். இதனால் டுவிட்ஸ்டான காட்சிகளும் இருக்கும், அதிரடி ஆக்ஷனும் இருக்கும். சந்தானம் ஏற்கெனவே கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டார். இந்தப் படம் இன்னும் ஒரு படி அவரை உயர்த்தி விடும் என்கிறார் இயக்குனர் சேதுராமன்.
Monday, October 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment